கல்லூரி காலம்
- MUGESH

- Feb 24, 2022
- 1 min read
Updated: Mar 16, 2022
கல்லூரி வாழ்க்கையில் பல பகுதிகள் இருப்பினும்,
வாழ்க்கையின் தேடல் குறித்த எண்ணம் எல்லோரையும் தழுவ மறப்பதில்லை;
ஆம் என்னையும் தழுவியது.
வாழ்க்கையில் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்ற எண்ணம் ஒருபுறம்,
நாம் படிக்கின்ற பாடம் பசிதீர்க்குமா என்ற குழப்பமோ மறுபுறம்.
சுழற்சி என்பது வாழ்க்கையின் முக்கிய விதியாகும்.
இதில் நானும் விதிவிலக்கல்ல;
திசைமாறிய காற்றாடியாய் மனம் எங்கோ;
மெய் மாத்திரம் வகுப்பறையில் வசனங்கள் எழுதிக் கொண்டிருந்தது.
உலகை ஆள மனம் சிறகடித்த வேளையில், வேலை பயமோ நிஜத்தில்.
அது ஒரு சுகமான மன வலிகளை சுமந்த காலம் அது...
அடுத்த வேளை...வேலை.... தேடல்... முற்றுப்பெறாத வார்த்தைகளாய் கல்லூரி காலம்.
- முகேஷ்





💝